Monday, April 7, 2008

சென்னையில் புதிதாக 35,000 பணியாளர்: விப்ரோ

தகவல் தொழில் நுட்பத்துறையில் முன்னணியில் திகழும் இந்திய நிறுவனமான விப்ரோ டெக்னாலஜீஸ், சென்னையில் புதிதாக 35 ஆயிரம் பணியாளர்களை நியமிக்க உள்ளது.இதற்காக சோழிங்கநல்லூரில் உள்ள எல்காட் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் 80 ஏக்கர் பரப்பில் புதிய அலுவலகத்தை அந்நிறுவனம் கட்டி முடித்துள்ளது.இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய விப்ரோ நிறுவன (எண்டர்பிரைஸ் சொல்யூஷன் பிரிவு) தலைவர் சுதிப் பானர்ஜி, நிறுவனத் தேவைக்கு ஏற்ற திறமையுள்ள பணியாளர்கள் சென்னையில் அதிகளவில் கிடைப்பதே நிறுவன விரிவாக்கத்திற்கு முக்கிய காரணம் என்றார்.சோழிங்கநல்லூரில் உள்ள அலுவலகத்தில் தற்போது 2,500 பேர் பணியாற்றி வருவதாகவும், இதில் மொத்தம் 35 ஆயிரம் பேர் பணி புரியலாம் என்பதால் விரைவில் மீதமுள்ள பணியிடங்களை நிரப்ப உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.சோழிங்கநல்லூர் அலுவலகத்தையும் சேர்த்து சென்னையில் மொத்தம் 6 விப்ரோ அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் டெலிகாம், வங்கி சேவை, சில்லரை விற்பனை, தொழில்நுட்ப மற்றும் ஊடகத் துறைகளுக்கு தேவையான தொழில்நுட்ப தீர்வைகள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Comments :

0 comments to “சென்னையில் புதிதாக 35,000 பணியாளர்: விப்ரோ”

PNO HELPLINE

  • காவல் - 243224
  • மருத்துவமனை(G.H.) - 253996
  • ஆம்புலன்ஸ் - 253800
  • தீ - 243303
  • மின் வாரியம் - 253786
  • துணை மின்நிலையம் - 247220
  • தொலைபேசி BSNL - 243298
  • பேரூராட்சி - 243249
  • பஞ்சாயத்து யூனியன் - 243227
  • கேஸ் சர்வீஸ் - 243387
  • ஜமாஅத் - 253800
  • அஞ்சல் நிலையம் - 243203
  • சின்னகடை P.O. - 243230
  • இரயில்வே - 243228